/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புகார் பெட்டி... விபத்து அபாயம்
/
புகார் பெட்டி... விபத்து அபாயம்
ADDED : டிச 31, 2025 03:07 AM
விபத்து அபாயம் விருத்தாசலம் பங்களா தெருவில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
மணிகண்டன், விருத்தாசலம் மணல் குவியலால் விபத்து கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் சாலையில் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
கிருஷ்ணன், கடலுார் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக காத்திருப்பு கூடத்தில் பயனாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
காமராஜ், விருத்தாசலம் நோய் பரவும் அபாயம் கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெருவில் கால்வாயில் குப்பைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
பாலகுரு, கடலுார். கொசுத்தொல்லையால் அவதி நெய்வேலி டவுன்ஷிப் பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் கொசு மருந்து அடித்து நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைத்தியநாதன், நெய்வேலி. தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பார்த்தசாரதி, விருத்தாசலம்

