விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பயணிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
-சந்துரு விருத்தாசலம். அசுத்தமான கழிப்பறை கடலுார் பஸ் நிலைய கட்டண கழிப்பறையில் ரூ. 10 கட்டணம் வசூலிப்பதுடன், சுகாதார முறையில் பராமரிக்கப்படவில்லை.
-பச்சையப்பன், கடலுார். சென்டர் மீடியன் தேவை கடலுார் புதுச்சேரி மாநில எல்லையான முள்ளோடை வரை அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேந்தர், கடலுார். போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் .
-முத்து, கடலுார். வாகன ஓட்டிகள் அவதி ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதி சாலையில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
-கதிரேசன், கடலுார். விபத்து அபாயம் விருத்தாசலம் புறவழிச்சாலையில், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தம்பிதுரை, விருத்தாசலம்.

