போக்குவரத்துக்கு இடையூறு விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.
- இப்ராஹிம், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் கோ.பொன்னேரி புறவழிச் சாலையில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- பாரதி, விருத்தாசலம். கழிவறை வசதி தேவை விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்ததில் பயணிகள் நலன் கருதி கழிவறை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- பாண்டியன், விருத்தாசலம். பொதுமக்கள் அவதி கடலுார் அண்ணா மார்க்கெட் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
-பாலகிருஷ்ணன், கடலுார். சுகாதார சீர்கேடு கடலுார், புதுப்பாளையம், அப்பாவு தெருவில், கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.
-முருகேசன், கடலுார்.

