/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு
ADDED : செப் 12, 2025 05:11 AM

சேத்தியாத்தோப்பு: வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கணினி சார் அறிதிறன் பயிற்சிக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் எதிர்கால நுண்ணறிவு, செயற்கையறிவு திட்டமான தமிழக அரசின் கணிணி சார் பயிற்ச்சிக்கான 'டி.என் ஸ்பார்க்' முன்னோடி திட்டத்திற்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமை தாங்கினார். வட்டார ஆசிரியர் பயிற்றுநர் தசோதரன் 'டி.என் ஸ்பார்க்' திட்டத்தை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு திட்டத்தின் நோக்கம், நுண்ணறிவு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியை வள்ளி நன்றி கூறினார்.