ADDED : மார் 18, 2024 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி :  திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் தேசிய நுகர்வோர் தினம் குறித்து, ரோவர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலுார் ரோவர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் சூர்யா, விஷ்ணு, தினேஷ்குமார், சூர்யா, விஷால்குமார், உதயகுமார், யாகேஷ், தமிழினியன், தமிழரசன் ஆகியோர் நுகர்வோரின் உரிமைகள் குறித்து விளக்கினர்.
பொதுமக்களிடம் நுகர்வோர் தினம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

