/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் தொடர் மழை விவசாய பணிகள் பாதிப்பு
/
மாவட்டத்தில் தொடர் மழை விவசாய பணிகள் பாதிப்பு
ADDED : ஆக 12, 2025 01:54 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.
அதிகாலை வரை மழை நீடித்தது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீ.,யில் பின்வருமாறு:
பண்ருட்டி 74, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் 69, லால்பேட்டை 65, பெலாந்துறை 63.4, சேத்தியாத்தோப்பு 53.4, பரங்கிப்பேட்டை 47.8, சிதம்பரம் 45.5, தொழுதுார் 45, கீழ்ச்செருவாய் 39.2, அண்ணாமலை நகர், லக்கூர் 38, வேப்பூர் 35, கொத்தவாச்சேரி 34, ஆர்.சி.குடிதாங்கி 33, ஸ்ரீமுஷ்ணம் 32.1, காட்டுமயிலுார் 30, மேமாத்துார் 22, வானமாதேவி 18.4, குப்பநத்தம் 15, விருத்தாசலம் 12, குறிஞ்சிப்பாடி 9, கடலுார் 7, வடக்குத்து 5 மி.மீ., பதிவானது.
மாவட்டத்தில் கடும் வெயில் தாக்கம் இருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான காற்று வீசுகிறது. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் விருத்தாசலம், பின்னலுார், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் தண் ணீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.