ADDED : நவ 15, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: காப்பர் கம்பி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தில் விவசாய நிலத்தின் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது.
நேற்று (நவ.,14) இரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து விட்டு அதில் இருந்த 170 கிலோ காப்பர் கம்பிகளை திருடி சென்றனர்.
மின்வாரிய உதவி மின் பொறியாளர் ரமேஷ் புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருங்குணம் பகுதியில் இதேபோல் மின்சார டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருடு போனது குறிப்பிடத்தக்கது.
