ADDED : மே 26, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த போது, மின்தடை ஏற்பட்டது.
அப்போது, மேல திருக்கழிப்பாளை கிராமத்தை சேர்ந்த குஞ்சிதபாதம் மனைவி தனலட்சுமி என்பவர், விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது.