ADDED : டிச 25, 2024 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகரமன்ற அவசரக் கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது.
கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சொத்து வரி உயர்வு மற்றும் குத்தகை ஏலம் பற்றிய 2 தீர்மானங்கள் மட்டும் கொண்டு வரப்பட்டன. அப்போது, சுயேச்சை கவுன்சிலர் பாரூக் உசேன் எழுந்து, சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கதக்கது, முன் அறிவிப்பு இல்லாமல் வரி உயர்வு செய்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என, கூறி வெளிநடப்பு செய்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

