UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 04:24 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், சுப்புராயன், உதயகுமார், பிரகாஷ், ராஜேஷ் கண்ணன், வாஞ்சிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பக்கீரான், ஏழுமலை, ஸ்டீபன் ராஜ், மருதவாணன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
