ADDED : ஆக 15, 2025 11:25 PM
விருத்தாசலம், ;விருத்தாசலத்தில் சுடுகாடு பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
விருத்தாசலம் தாலுகா, மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் ஊராட்சியில், ஆதிதிராவிட இந்துக்கள் மற்றும் ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் இடையே சுடுகாடு பிரச்னை உள்ளது.
இது தொடர்பாக விருத் தாசலம் தாசில்தார் அரவிந்தன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உட்பட இருதரப்பு முக்கியஸ்தர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதில், மு.பரூர் சுடுகாடு தொடர்பாக வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ., ஆகியோர் மேற்கொள்ளும் அளவீடு தொடர்பான முடிவுகளின் பேரில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பு பிரமுகர்கள் வாக்குவாதத்தில ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.