ADDED : ஜூலை 24, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் ரயில்வே மைதானத்தில் கே.ஜி.எஸ்., மற்றும் ஆர்.சி.சி., அணிகள் இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.
போட்டியை, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், முன்னாள் தமிழ்நாடு கால்பந்து அணி தலைவர் காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் 40 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படும்.