குட்கா விற்ற பெண் கைது
மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, நடியப்பட்டு மேற்கு தெரு பெட்டிக் கடையில் குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. உடன், வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் வெங்கடேசன் மனைவி மணிமேகலை, 30, என்பவரை கைது செய்து, 6,000 ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.
மது பாட்டில் விற்ற 3 பேர் கைது
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 45; தனுஷ், 21; ஆகிய இருவரையும் கைது செய்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனுார் காலனியில் பெட்டிக்கடையில் மது பாட்டில் விற்ற மயில்வாகனம், 55; என்பவர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
முதியவர் சாவு
விருத்தாசலம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; நேற்று முன்தினம் மனைவியுடன், சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பஸ்சில் திரும்பியவர், விருத்தாசலம் கடை வீதியில் இறங்கி நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.