/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீனவர் வலையில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
/
மீனவர் வலையில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு
ADDED : ஜன 06, 2025 06:47 AM

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தில் வீசிய மீன்பிடி வலையில் சிக்கிய முதலையை, வனத்துறையினர் மீட்டு, கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று காலை, அதே பகுதியில் உள்ள குளத்தில், மீன் பிடிக்க வலை வீசினர். அதில், முதலை ஒன்று சிக்கியது.
தகவலறிந்த சிதம்பரம் வனச்சரகர் வசந்த் பாஸ்கர் உத்தரவின் பேரில், வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் ஞானசேகரன், புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்று, வலையில் சிக்கிய 6 அடி நீளம், 50 கிலோ எடை கொண்ட முதலையை மீட்டு, பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். முதலையை கிராம மக்கள் அச்சத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்து சென்றனர்.
பின்னர், பிடிபட்ட முதலையை வனத்துறையினர், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

