/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்வளர்ப்பு குளத்தில் முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
/
மீன்வளர்ப்பு குளத்தில் முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மீன்வளர்ப்பு குளத்தில் முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மீன்வளர்ப்பு குளத்தில் முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 01, 2025 02:29 AM
காட்டுமன்னார்கோவில்: எடையார் கிராமத்தில் மீன் வளர்ப்பு குளத்தில் இருந்த முதலையைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி, 45; இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் குட்டை வெட்டி வளர்ப்பு மீன் வளர்த்து வருகிறார். மீன் குட்டையில் ராட்சத முதலை இருந்தது.
தகவல் அறிந்த வனவர்கள் பன்னீர்செல்வம், அன்புமணி மற்றும் முதலை பிடிக்கும் நந்திமங்கலத்தைச் சேர்ந்த ராஜி ஆகியோர் குளத்தில் இருந்த முதலையை வலை வீசி பிடித்தனர்.
பிடிபட்ட முதலை ஆறு வயதுடைய 7 அடி நீளமும் 100 கிலோ எடை கொண்டதாக இருந்தது. வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி ஏரியில் விட்டனர்.