/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுபன்றிகளால் பயிர் சேதம் : கடலுார் விவசாயிகள் கவலை
/
காட்டுபன்றிகளால் பயிர் சேதம் : கடலுார் விவசாயிகள் கவலை
காட்டுபன்றிகளால் பயிர் சேதம் : கடலுார் விவசாயிகள் கவலை
காட்டுபன்றிகளால் பயிர் சேதம் : கடலுார் விவசாயிகள் கவலை
ADDED : மே 24, 2025 07:15 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மக்காச்சோளம் வயலில் காட்டுபன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மக்காச்சோளம் உலக அளவில் பயிர் செய்யக் கூடிய தானியமாகும். கரிசல்மண் மற்றும் செம்மண் நிலத்தில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. ரபி பருவத்தில், மக்காச்சோளம் பிப்ரவரி மாதத்தில் விதைக்கப்பட்டு மே மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.
மற்ற பயிர்களைக் காட்டிலும் விவசாய கூலியாட்கள் குறைவாக தேவைப்படுவதால் மக்காச்சோளம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையம், கங்கணாங்குப்பம், சேடப்பாளையம், குள்ளஞ்சாவடி, ராமாபுரம், எஸ்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர்களில் மக்காச்சோளம் பயிர் செய்யப்படுகிறது. தற்போது மக்காச்சோளம் கதிர் விட்டு அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில் காட்டுபன்றிகள் மக்காச்சோளத்தை நாசம் செய்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.