தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பயிர் பன்முகப்படுத்துதல் விவசாயிகளுக்கு பயிற்சி

பயிர் பன்முகப்படுத்துதல் விவசாயிகளுக்கு பயிற்சி

பயிர் பன்முகப்படுத்துதல் விவசாயிகளுக்கு பயிற்சி


UPDATED : அக் 24, 2026 01:02 AM

ADDED : அக் 24, 2026 12:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:02 AM ADDED : அக் 24, 2026 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 'பயிர் பன்முகப்படுத்துதல்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பயிர் பன்முகப்படுத்துதலின் முக்கியத்துவம், மாற்றுப்பயிர் சாகுபடியின் அவசியம், அதற்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும், மண் மாதிரி எடுத்தல் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கம் அளித்தார். பசுந்தாள் உர விதைகள் பயன்பாடு, இந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு பிரீமியம் தொகை மற்றும் பயிர் காப்பீடு செய்வது அவசியம் குறித்து வேளாண் அலுவலர் செல்வமூர்த்தி பேசினார்.

நீர் மற்றும் உர மேலாண்மை, வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் உள்ள திட்ட இடுபொருட்கள் இருப்பு குறித்து துணை வேளாண் அலுவலர் முதியன் பேசினார். வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலாம்பிகை விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us