/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேதார கவுரி விரதத்திற்கு பூஜை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்
/
கேதார கவுரி விரதத்திற்கு பூஜை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்
கேதார கவுரி விரதத்திற்கு பூஜை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்
கேதார கவுரி விரதத்திற்கு பூஜை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்
ADDED : நவ 02, 2024 07:14 AM

புவனகிரி: கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு புவனகிரியில் பூஜை பொருட்கள் வாங்க பெண்கள் அதிகளவில் குவிந்தனர்.
ஈசனை விட்டுப்பிரியாமல் இருக்க, அவர் இடப்பாக்கத்தில் ஐக்கியம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், அம்பிகை உமாதேவி தவம் செய்வதற்கு திருக்கேதாரம் என்ற திருத்தலத்தை அடைந்தார். அங்கு, கவுதம முனிவரைச் சந்தித்து தன் எண்ணத்தைச் சொல்ல, அவர் அம்பிகை உமாதேவிக்குச் சொல்லும் விதமாக நமக்கு உபதேசித்ததே கேதார கவுரி விரதம்.
பூவுலகில் ஒரு அரசனுக்குப் புண்ணியவதி, பாக்கியவதி என்ற இரண்டு பெண்கள் இருந்தனர். அவ்வரசன் தன்நாடு நகரமெல்லாம் இழந்தான். இதனால் வருந்திய அப்பெண்கள், கங்கைக் கரையில் கேதாரேஸ்வர விரதம் இருக்கும், தேவ கன்னியரிடமிருந்து நோன்புக் கயிற்றை வாங்கிக் கையில் கட்டிக் கொண்டனர். அதன் பின் தொலைந்த ஐஸ்வர்யம் மீண்டும் கிடைத்தது.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் மேற்கொள்கின்றனர். இதை மேற்கொண்டால், பெண்கள் விரும்பிய எல்லா வளங்களையும் பெறுவர். என்பது ஐதீகம்.
இதனால் தீபாவளிக்குப் பின் அமாவசை தினத்தில் பலரும் விரதமிருந்து கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று புவனகிரி பகுதி சிவன் கோவிலில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதற்காக காலையில் இருந்து பக்தர்கள் திரண்டு மங்கலப்பொருட்கள் வாங்கினர்.

