/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அ.தி.மு.க.,வினர் திடீர் போர்க்கொடி...
/
கடலுார் அ.தி.மு.க.,வினர் திடீர் போர்க்கொடி...
ADDED : மார் 21, 2024 12:15 AM
கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, அக்கட்சி நிர்வாகிகள் 43 பேர் விருப்ப மனு அளித்தனர்.
ஆனால், கூட்டணி முடிவாகாமல் இருந்ததால், முக்கிய நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், தி.மு.க.,கூட்டணியில் காங்., கட்சிக்கும், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வுக்கும் சீட் ஒதுக்கப்பட்டது.
அதனால், அ.தி.மு.க., போட்டியிட்டால், வெற்றியை பறித்து விடலாம் என, நிர்வாகிகள் கணக்கு போட்டனர். தேர்லில் போட்டியிட பலரும் விரும்பினர். ஆனால், திடீரென கூட்டணியில் தே.மு.தி.க.., போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கடலுாரில் அ.தி.ம.க., போட்டியிட வேண்டும் என, திடீர் போர்க்கொடி துாக்கி, கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

