/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மைதானத்தில் கேளிக்கை நடத்த கட்டணம்... உயர்வு; கடலுார் மாநகராட்சி திடீர் நடவடிக்கை
/
மைதானத்தில் கேளிக்கை நடத்த கட்டணம்... உயர்வு; கடலுார் மாநகராட்சி திடீர் நடவடிக்கை
மைதானத்தில் கேளிக்கை நடத்த கட்டணம்... உயர்வு; கடலுார் மாநகராட்சி திடீர் நடவடிக்கை
மைதானத்தில் கேளிக்கை நடத்த கட்டணம்... உயர்வு; கடலுார் மாநகராட்சி திடீர் நடவடிக்கை
ADDED : ஜன 15, 2025 12:38 AM

கடலுார்: கடலுார் மைதானத்தில் பொருட்காட்சி, சர்க்கஸ், பொதுக்கூட்டம் நடத்த கட்டணம், வைப்புத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சிக்கு சொந்தமான மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசு அனுமதியுடன் சர்க்கஸ், பொருட்காட்சி, பொது நிகழ்ச்சிகள் நடத்த தனியார், தனியார் நிறுவனங்களிடம் கட்டணம் பெறப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சர்க்கஸ் நடத்த நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும், வைப்புத்தொகை 20 ஆயிரம் ரூபாயும், சுத்தம் செய்யும் பணிக்கு 5 ஆயிரம் ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வந்தன.
அதேபோல், பொருட்காட்சி நடத்த நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாயும், வைப்புத்தொகை 50 ஆயிரம், சுத்தம் செய்யும் பணிக்கு 5 ரூபாயுமாக வசூலிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதிற்கு முன் ஆயத்தப்பணி 7 நாட்கள் மற்றும் முடிவுற்ற பின்னர் அகற்றம் செய்யும் பணிக்கு 7 நாட்கள் என, மொத்தம் 14 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வீதம் வாடகை சேர்த்து வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாடகை தொகையாவும், சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்தது. தற்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் முதல்வரின் பொது நிவாரண நிதியாக நாள் ஒன்றுக்கு 7,500 வீதம், பொருட்காட்சி நடத்த வசூல் செய்யப்பட்டு வருகிறது.
எனவே இதனை கருத்தில் கொண்டு தற்போதைய காலத்திற்கேற்ப வாடகை கட்டணம் மற்றும் சுத்தம் செய்யும் பணிக்கான கட்டணத்தை மாநகராட்சி அனுமதியுடன் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணப்படி சர்க்கஸ் நடத்த நாள் ஒன்றுக்கு வாடகை கட்டணம் 5 ஆயிரமாகவும், வைப்புத்தொகை 50 ஆயிரமாகவும், சுத்தம் செய்யும் பணிக்கு 10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதற்கு முன் ஆயத்தப்பணி 4 நாட்கள் மற்றும் முடிவுற்ற பின்னர் அகற்றம் செய்யும் பணிக்கு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வீதம் வாடகையோடு சேர்த்து வசூலிக்கப்படும்.
அதேபோல், பொருட்காட்சி நடத்த நாள் ஒன்றுக்கு 8,500 ரூபாயும், வைப்புத்தொகை 1 லட்சம் ரூபாயாகவும், சுத்தம் செய்யும் பணிக்காக 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு முன்பு 7 நாட்களும், பின்பு 7 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் வாடகை சேர்த்து வசூலிக்கப்படும். இது தவிர ஒரு வார காலத்திற்குள் நடத்தப்படும் நிகழ்ச்சி நாள் ஒன்றுக்கு வாடகை 8,500, வைப்புத்தொகை 20 ஆயிரம், சுத்தம் செய்யும் பணிக்கு 10 ஆயிரம் வீதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் மாநகராட்சி மன்ற அனுமதியோடு இனி வரும் காலங்களில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

