sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி உறுப்பினர்கள் முற்றுகையால் பரபரப்பு

/

ஊராட்சி உறுப்பினர்கள் முற்றுகையால் பரபரப்பு

ஊராட்சி உறுப்பினர்கள் முற்றுகையால் பரபரப்பு

ஊராட்சி உறுப்பினர்கள் முற்றுகையால் பரபரப்பு


ADDED : ஜூலை 25, 2011 11:06 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி தலைவர் சேகர் நிதியை முறையாக பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஊராட்சி உறுப்பினர்கள் சுதாமன், மகாலிங்கம், ராமலிங்கம்,கோவிந்தராஜ், மலர், கஸ்தூரி, விஜயலட்சுமி ஆகிய 7 பேர் ராஜினாமா செய்து பி.டி.ஓ., விடம் கடிதம் கொடுத்தனர்.இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலகம் சார்பில் ஊராட்சி அலுவலகத்தில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து ஊராட்சி தீர்மானம் மூலம் ஒன்றிய அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினால் கலெக்டருக்கு பரிந்துரை செய்வோம் என தெரிவித்தனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று (25ம் தேதி) காலை 10 மணியளவில் நடத்தப்படுவதாக இருந்தது.ஆனால் ராஜினாமா செய்த 7 பேரும் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து காலை 11 மணி வரை காத்திருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஊராட்சி உதவியாளர் உள்ளிட்ட யாரும் வராததால் ராஜினாமா செய்த ஊராட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் திரண்டு முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us