நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார்.வேப்பூர் அடுத்த ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி கட்டிமுத்தாள், 22; இவர் நேற்று முன்தினம் வேப்பூரில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.அப்போது அரியலூரில் இருந்து சிமென்ட் லாரி கட்டிமுத்தாள் மீது மோதியது.
உடன் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.