/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.4.80 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
/
ரூ.4.80 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
ADDED : ஆக 18, 2011 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அருகே மீனாட்சியம்மன் நகரில் ஒன்றிய பொது நிதி மூலம் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது.
சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி மீனாட்சியம்மன் நகரில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டது. இதனையடுத்து ஒன்றிய பொது நிதியிலிருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி ஊராட்சி தலைவர் வேணுகோபால் முன்னிலையில் துவங்கியது.

