ADDED : அக் 11, 2011 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்., வேட்பாளர் பஞ்சவர்ணம் வீதிவீதியாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.
பண்ருட்டி நகரமன்ற தலைவர் பதவிக்கு காங்.,கட்சி சார்பில் போட்டியிடும் பஞ்சவர்ணம் தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் இருந்து துவங்கி ஒவ்வொரு வார்டாக சென்று வீடுகள் தோறும் ஓட்டுகள் சேகரித்தார். திருவதிகை, கடலூர் சாலை, போலீஸ் லைன், லிங்க்ரோடு, மேலப்பாளையம், லட்சுமிபதி நகர், வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் ஓட்டுகள் சேகரித்தார். தொழிலதிபர் குமரவேலு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி,சோழன், முன்னாள் மாவட்ட காங்., துணைத் தலைவர் லட்சுமணன், இளைஞர் காங்., துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

