/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
/
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
ADDED : ஏப் 16, 2025 09:38 AM

கடலுார் : அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசில் ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலுார் புதுநகர் போலீசில், ஹிந்து அன்னையர் முன்னணி, கடலுார் மாவட்ட செயலாளர் தனலட்சுமி தலைமையில் மனு கொடுத்தனர்.
அதில், அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தின் சைவ, வைணவ வழிபாட்டு புனித மத சின்னங்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார். மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளார்.
ஹிந்து மத புனித வழக்கங்களை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட் டுள்ளது.
அதேபோன்று கள்ளக் குறிச்சி எஸ்.பி., மற்றும் கலெக்டர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்டஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், அருண் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.