/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சிறையில் சோதனை மொபைல் போன் பறிமுதல்
/
கடலுார் சிறையில் சோதனை மொபைல் போன் பறிமுதல்
ADDED : செப் 25, 2024 06:28 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் சிறப்புக்குழுவினர் அதிரடி சோதனை நடத்தியதில்கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் மற்றும் பேட்டரிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலுார் கேப்பர் மலை மத்திய சிறையில் கைதிகள் சிலர் மொபைல் போன் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையொட்டி சிறைத்துறை சிறப்பு குழுவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசாரணை கைதி சஞ்சய் ராஜா, கழிவறை ஒன்றில் மறைத்து வைத்திருந்த பட்டன் மொபைல் போன், பேட்டரி 3, சார்ஜர், சிம் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறை அலுவலர் ரவி கொடுத்த புகாரின்பேரில் முதுநகர்போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.