sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க முதல்வருக்கு மனு

/

நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க முதல்வருக்கு மனு

நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க முதல்வருக்கு மனு

நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க முதல்வருக்கு மனு


ADDED : ஆக 03, 2011 01:42 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : பகுதி நேர நூலகர்களுக்கு ஊர்ப்புற நூலகர்களாக பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பகுதி நேர நூலகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கிராமப்புறத்தில் பொது அறிவு வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக பகுதி நேர நூலகம் தொடங்கப்பட்டு பணியாற்றுகிறோம். எங்களுக்கு ஒரு நிலையான ஊதியம், பதவி உயர்வு இல்லை. மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறோம். பலருக்கு வயது கடந்த நிலையில் வேறு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பும் இல்லை. 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகிறோம். கடந்த தி.மு.க., அரசு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பகுதி நேர நூலகர்களை, ஊர்ப்புற நூலகர்களாக பணி நியமனம் செய்தது.

இதில் ஒரு சிலருக்கு கல்வித் தகுதி இல்லை என்பதற்காக எங்களை புறக்கணித்து விட்டது. இப்போது நாங்களும் நூலக கல்வித் தகுதியினை முடித்து தயாராக உள்ளோம். இதில் 30 பேர் தி.மு.க., அரசால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கதியாக உள்ளோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் எங்களுக்கு ஊர்ப்புற நூலகராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us