ADDED : செப் 10, 2011 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.டில்லி ஐகோர்ட் முன்பு கடந்த 7ம் தேதி குண்டு வெடித்தது.
அதில் 12 பேர் இறந்தனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.
அதில் கடலூரில் வக்கீல்கள் ஜெயபால் தலைமையிலும், சிதம்பரத்தில் செந்தில்குமார், பரங்கிப்பேட்டையில் பக்கிரிசாமி, நெய்வேலியில் கலைமணி, காட்டுமன்னார்கோவிலில் செந்தில்குமார், பண்ருட்டியில் வாசுதேவன், திட்டக்குடியில் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.

