/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய அளவில் முதலிடம்: எம்.எல்.ஏ., பாராட்டு
/
தேசிய அளவில் முதலிடம்: எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : செப் 14, 2011 12:09 AM
விருத்தாசலம்:தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில் முதலிடம் பிடித்த
விருத்தாசலம் மாணவர்களை எம்.எல்.ஏ., பாராட்டினார்.சென்னை கீழ்பாக்கம்
ஜெ.ஜெ., விளையாட்டரங்கில் கடந்த வாரம் தேசிய அளவிலான யோகா மற்றும் கராத்தே
போட்டி பல்வேறு பிரிவுகளில் நடந்தது.
இதில் விருத்தாசலம் பி.வி.பி.,
மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் முகமது ஸர்ஜீன் 9 வயதிற்குட்பட்டோருக்கான
பிரிவில் நடந்த யோகா போட்டியில் முதல் பரிசையும், கராத்தே போட்டியில்
இரண்டாம் பரிசையும் பெற்றார்.பாத்திமா பள்ளியைச் சேர்ந்த மாணவர் சங்கரையா
12 - 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் யோகாவில் முதல் பரிசையும், கராத்தேவில்
மூன்றாம் பரிசையும் பெற்றார். 15 வயது பிரிவினருக்கான யோகா மற்றும்
கராத்தே போட்டியில் அதே பள்ளி மாணவன் அரவிந்த் மூன்றாம் பரிசு
பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்களை முத்துகுமார் எம்.எல்.ஏ., பாராட்டி
சான்றிதழ் வழங்கினார். பயிற்சியாளர் பாபு உடனிருந்தார்.