/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில ஆணழகன் போட்டி கடலுார் காவலருக்கு தங்கம்
/
மாநில ஆணழகன் போட்டி கடலுார் காவலருக்கு தங்கம்
ADDED : ஆக 07, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கடலுார் போலீஸ்கார் ஒருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்தது.
கடலுார் ஆயுதப்படை போலீஸ்காரர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கமும், ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் 2ம் பரிசு பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், போலீஸ்காரர் விஷ்ணுபிரசாத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டராஜ் உடன் இருந்தார்.