/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
கடலுாரில் மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஆக 07, 2025 02:33 AM

கடலுார்: கடலுாரில் இருந்து கடத்த முயன்ற மூன்று டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த சாவடி பகுதியிலிருந்து புறவழிச்சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருவாய்த்துறை பறக்கும் படை மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேனை நிறுத்திய போது, டிரைவர் வேனை நிறுத்தவிட்டு தப்பியோடினார். அதிகாரிகள் மினிவேனை சோதனை செய்த போது அதில் மேல் பகுதியில் சாதாரண அரிசியும், அடிப்பகுதியில் ரேஷன் அரிசி இருப்பதையும் கண்டறிந்தனர்.
அதிலிருந்து மூன்று டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வேனை ஓட்டி வந்தது யார், எங்கிருந்து எங்கு கடத்திச்செல்லப்படுகிறது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.