ADDED : பிப் 13, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் புதிய வருவாய்த்துறை ஆர்.டி.ஓ., அபிநயா நேற்று பொறுப்பேற்றார்.
கடலுார் வருவாய்த்துறையில் ஆர்.டி.ஓ., வாக பணிபுரிந்த அதியமான் கவியரசு, திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, புதிய ஆர்.டி.ஓ.,வாக அபிநயா நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
கடலுாரில் கடந்த 2022ம் ஆண்டு முதல் துணை கலெக்டர் பயிற்சி பெற்று வந்த அபிநயா, கடலுார் புதிய ஆர்.டி.ஓ., நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்த்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். புதிய ஆர்.டி.ஓ., அபிநயா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.