/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
/
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
ADDED : மே 08, 2025 01:36 AM

கடலுார்: சேலத்தில் நடந்த மாநில அளவிலான சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், கடலுாரைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அசோசியேஷன் சார்பில், கடந்த 29 மற்றும் 30ம் தேதியில் சேலம் மாவட்டம், ஓமலுாரில் மினி சப்ஜூனியர் மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
இதில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் பூஜாஸ்ரீ மற்றும் யாஷிகா ஆகியோர் 11வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றனர். மாணவி பூஜாஸ்ரீ ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் மாணவிகள் யாஷிகா, பூஜாஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட விளையாட்டுஅலுவலர் மகேஷ்குமார், கடலுார் மாவட்ட சாப்ட் டென்னிஸ் செயலாளர் சித்ரா அப்பாதுரை, தலைவர் கிருஷ்ணசாரதி மற்றும் பயற்சியாளர் அப்பாதுரை ஆகியோர் பாராட்டினர்.