ADDED : அக் 09, 2024 06:24 AM
கடலுார் : கடலுார் மாநகரில் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி நிறுத்தப்படும் மின்தடையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுாரில் இரவு நேரங்களில் மழை பொழிவதால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மழை பொழிவு இல்லையென்றாலும் மின்தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11:30 ஏற்பட்ட மின்தடை 12:00 மணி வாக்கில் குறைந்த மின்னழுத்த சப்ளை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மின் சப்ளை சரி செய்யப்பட்டு 12:30 மணிக்கு முழு அளவில் மின்சாரம் வழங்கியது. இதற்கிடையே இன்வெட்டர் வைத்திருந்த நடுத்தர குடும்பத்தினர் தப்பித்துக்கொண்டனர். நள்ளிரவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் புழுக்கத்தினால் மொபைல் டார்ச்சை பயன்படுத்தி சாலையில் அங்குமிங்குமாக நடந்தனர். திருடர்கள் பயத்தினால் கதவை திறந்து வைத்து துாங்க முடியாமல் பொது மக்கள் துாக்கத்தை தொலைத்தனர். இதுபோன்று அடிக்கடி இரவு நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.