/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்பணையின் ஷட்டர் திறப்பு வீணாகும் தண்ணீர்
/
தடுப்பணையின் ஷட்டர் திறப்பு வீணாகும் தண்ணீர்
ADDED : டிச 17, 2025 06:49 AM

நெ ல்லிக்குப்பம், விஸ்வநாதபுரத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது.
இந்த தடுப்பணையில் ஒருபுறம் புதுச்சேரி மாநிலத்துக்கும், மறுபுறம் தமிழகத்துக்கும் தண்ணீர் செல்ல ெஷட்டர்கள் உள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சாத்தனுார் அணையில் தண்ணீர் திறந்ததால் தடுப்பணை வழிந்து தண்ணீர் சென்றது. கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து நின்றதால் தடுப்பணையின் உள்ளேயே தண்ணீர் தேங்கி நின்றது.
குறைந்தது மூன்று மாதத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று காலை தமிழக பகுதியில் உள்ள ெஷட்டரை திறந்து விட்டதால் வீணாக தண்ணீர் வெளியேறி கடலுக்கு சென்றது.
பொதுப்பணி துறையில் திறக்கவில்லை. ெஷட்டரில் பூட்டு இல்லாததால், விஷமிகள் யாராவது திறந்தார்களா என தெரியவில்லை. ஷட்டரில் பூட்டு போட்டு பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

