ADDED : டிச 29, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் லைப் ஹெல்ப் மோட்டிவேஷன் டிரஸ்ட் பார் த ஹான்டிகேப்ட் அறக்கட்டளை ஆண்டுவிழா, மாற்றுத் திறனாளிகள் தினவிழா,புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் விழாவை துவக்கி வைத்து மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செயலாளர் முரளி, இணை செயலாளர் ஜென்மராகினி, அரிமா சங்க கந்தசாமி, நிஜாமுதீன், முத்துகிருஷ்ணன், மனித உரிமை சங்க அகில இந்திய தலைவர் முருகன்ற உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சலகைகளை பெற்று தருவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

