ADDED : நவ 28, 2026 10:59 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றியதை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, பண்ருட்டியில் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
சுப்ரீம் கோர்ட் மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மீது தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் இன்று (நவ.,28) மாலை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்பட்து.
அதனை கொண்டாடும் விதமாக பண்ருட்டி அடுத்த வையாபுரி பட்டினம் கிராம மக்கள் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
அதேபோல் பண்ருட்டி நகர பா.ஜ., சார்பில் நான்கு முனை சந்திப்பில் நகர தலைவர் வெற்றிவேல் தலைமையில் இனிப்பு வழங்கி, கையில் தீபம் ஏந்தி கொண்டாடினர்.
இதில் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் விஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
