/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடைகள் கட்டும் பணி தாமதம்; வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
/
கடைகள் கட்டும் பணி தாமதம்; வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
கடைகள் கட்டும் பணி தாமதம்; வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
கடைகள் கட்டும் பணி தாமதம்; வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஆக 18, 2025 11:45 PM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் நகராட்சி சார்பில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டாததை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான 18 கடைகள் இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை என்பதால் இடித்து விட்டு 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டது.
கடைகளை வியாபாரிகள் காலி செய்ததும் பழைய கடைகளை இடித்து அகற்றினர்.
புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்த 3 மாதத்துக்கு முன் பள்ளம் தோண்டினர். ஆனால், இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் உள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் புலம்புகின்றனர்.
புதிய கடைகள் கட்டும் பணியை உடனடியாக துவங்காவிட்டால், கடைகள் கட்ட தோண்டிய பள்ளத்தில் மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடத்தப் போவதாக வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.