
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளியில் மாணவர்களுக்கு அரசு சைக்கிள்களை சேர்மன் ஜெயந்தி வழங்கினார்.
பள்ளியில் பிளஸ்1 மாணவ, மாணவியர் 183 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஆனந்த பாஸ்கரன் தலைமை தாங்கினார். தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் ஜெயந்தி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நகராட்சி துணைத் தலைவர் கிரிஜா, தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், தொழில்நுட்ப அணி அருள், கவுன்சிலர் புனிதவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.