/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 19, 2024 05:56 AM

கடலுார்: சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருந்ததியர் சமுதாய பொதுமக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதை கண்டித்தும், பாதையை மீட்டு தர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, அங்கிருந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை போட்டுவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

