ADDED : மார் 29, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பட்டூர் ஊராட்சியில் டெங்கு முன் தடுப்பு பணி முகாம் நடந்தது.
ஈ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட மலேரியா அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கி, டெங்கு முன் தடுப்பு, காய்ச்சல் கண்காணிப்பு, குடிநீரில் குளோரினேஷன் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கொசுவினால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் குறித்து கிராம மக்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டது. இதே போன்று, திட்டக்குடி நகராட்சி வார்டுகளில் டெங்கு முன் தடுப்பு பணி முகாம் நடந்தது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், முத்துச்செல்வன், மதனகோபால் உடனிருந்தனர்.