ADDED : நவ 15, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி வார்டுகளில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணி துவங்கியது.
மங்களூர் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திருமாவளவன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் குமரவேல், மணிகண்டன், முத்துச்செல்வம் மற்றும் நகராட்சி மேஸ்திரிகள், தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் வார்டு மக்களிடையே மழை காலத்தில் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்.
காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
தண்ணீர் சேமித்து வைத்துள்ள டிரம்களில் கொசு புகாதவாறு மூடி வைப்பது. பயனற்ற டயர்கள், உடைந்த பொருட்களை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும் என வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.