/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு
/
மழை பாதிப்பு வயல்களில் துணை இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 10, 2025 08:56 AM

கடலுார்: குமராட்சி வட்டாரத்தில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் ஆய்வு செய்தார். அப்போது, தெற்கு மாங்குடி, அத்திப்பட்டு, கூத்தன்கோவில், சாலியந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறையினை பின்பற்றி 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பு உள்ள வயல்களை ஆய்வு செய்து, பயிர் மதிப்பீடு செயலியில் விவசாயிகளின் ஆதார் எண், முகவரி, வங்கி கணக்கு எண், நில உட்பிரிவு, புல எண் விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வயல் புகைப்படங்கள் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்யப்பட்டதை ஆய்வு செய்தார்.
வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

