/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.3.95 கோடியில் வளர்ச்சி பணிகள் பெண்ணாடத்தில் கலெக்டர் ஆய்வு
/
ரூ.3.95 கோடியில் வளர்ச்சி பணிகள் பெண்ணாடத்தில் கலெக்டர் ஆய்வு
ரூ.3.95 கோடியில் வளர்ச்சி பணிகள் பெண்ணாடத்தில் கலெக்டர் ஆய்வு
ரூ.3.95 கோடியில் வளர்ச்சி பணிகள் பெண்ணாடத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 03, 2024 11:20 PM

பெண்ணாடம்: ரூ.3.95 கோடியில் பெண்ணாடம் பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியில் வெள்ளாற்றங்கரை பகுதியில் 2 கோடியே 58 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கருணாநிதி நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 22 லட்சம் ரூபாயில் முக்குளம் பூங்கா அமைக்கும் பணி, ரூ.15 லட்சத்தில் ரேஷன் கடை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை, நேற்று மாலை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, புதிய பஸ் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட சுகாதார வளாகம், கடைவீதி, வாள்பட்டறை பகுதிகளில் ஆய்வு செய்தார்.
பின்னர், முக்குளம் பூங்கா அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயல் அலுவலர் பாஸ்கர், தாசில்தார் அந்தோணிராஜ், பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல், முதல்நிலை எழுத்தர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.