ADDED : மே 11, 2025 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய திட்டப்பணிகளை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
அமைச்சர் கணேசன் பேசுகையில், 'மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்த போது, குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. அதனை சீரமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். சிறுபாக்கம் ஊராட்சியில் நிதி இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது' என்றார்.
கூட்டத்தில், திட்ட மேலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.