நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள புத்து மாரியம்மன் தனி சன்னதி உள்ளது. இங்கு, சாகை வார்த்தல் விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ஹரிபிரபு குருக்கள் செய்தார்.