/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - - பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர் - - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 27, 2025 04:51 AM

கடலுார்: கடலுார், வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய பதில் சொல், பரிசு வெல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து கடலுார் வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
போட்டியில் தேர்வான 16 மாணவிகள், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது. போட்டியின் இறுதியில் பிளஸ் 1 மாணவிகள் பர்வதவர்தினி, மரியம் முதலிடமும், பிளஸ் 1 மாணவி சாதனா, ஒன்பதாம் வகுப்பு மாணவி கீர்த்திகா இரண்டாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு உலக திருக்குறள் பேரவை கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர். உதவி தலைமை ஆசிரியர்கள் கோபி, மணி, ஆசிரியைகள் தெரசா கேதரின், லட்சுமி, கன்யாவிஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிளும் மெகா வினாடிவினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

