/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரிடர் மீட்பு படை செயல் விளக்கம்
/
பேரிடர் மீட்பு படை செயல் விளக்கம்
ADDED : நவ 27, 2025 04:51 AM
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரின் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 65 பேர், கடலுார் அடுத்த குடிகாட்டில் முகாமிட்டு உள்ளனர்.
நேற்று பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து செயல்விளக்க நிகழ்ச்சி கடலுார் சில்வர் பீச்சில் நடந்தது. தாசில்தார் மகேஷ் துவக்கி வைத்தார்.
பேரிடர் மேலாண்மை தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்பது உட்பட பல்வேறு செயல்விளக்கங்களை அளித்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

