/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு
/
கருணாநிதி நினைவு நாள் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : ஆக 05, 2025 02:01 AM
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்டத்தில் வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடத்த வேண்டுமென, கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்டத்தில் வரும் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகரம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், வார்டு தோறும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
முக்கிய இடங்களில் அமைதி பேரணி நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.