/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் மோதி வாலிபர் பலி வேப்பூர் அருகே மறியல்
/
வேன் மோதி வாலிபர் பலி வேப்பூர் அருகே மறியல்
ADDED : ஆக 05, 2025 02:00 AM
வேப்பூர்:கடலுார் மாவட்டத்தில், வேப்பூர் அடுத்த புல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் மணிகண்டன், 25; இவர், நேற்று மாலை 5:00 மணிக்கு பைக்கில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வேப்பூர் அடுத்த கழுதுாரில் சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி வேன், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆத்திரமடைந்த கழுதுார் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கழுதுார் பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு, கழுதுாரில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
இதனை தடுக்க கழுதுாரில் மேம்பாலம் கட்டித்தரக் கோரி 5:15 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் உதயகுமார், டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர்.
இதனையேற்று இரவு 7:15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.